நாமகிரிப்பேட்டை, ஆக.28: நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற மஞ்சள் ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்கவும் அதேபோல ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகளும் வந்திருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விரலி மஞ்சள் 600 மூட்டை, உருண்டை மஞ்சள் 260 மூட்டை, பனங்காளி மஞ்சள் 40 மூட்டை என மொத்தம் 900 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ₹16,236க்கும், குறைந்தபட்சம் ₹10,969க்கும், உருண்டை மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ₹13,888க்கும், குறைந்தபட்சம் ₹7,542க்கும், பனங்காளி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ₹14,769க்கும், குறைந்தபட்சம் ₹3,899க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 900 மூட்டை மஞ்சள் ₹72 லட்சத்துக்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
₹72 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
previous post