திருச்செங்கோடு, செப்.1:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. மஞ்சளை ஜேடர்பாளையம், சோழசிராமணி, இறையமங்கலம், சங்ககிரி, எடப்பாடி, கொளத்தூர், ஓமலூர், அரூர், பொம்மிடி, ஊத்தங்கரை, கொடுமுடி, பாசூர், அந்தியூர், துறையூர் தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூர், செய்யார், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். விரலி மஞ்சள் ₹11191 முதல் ₹15699 வரையிலும், கிழங்கு மஞ்சள் ₹9759 முதல் ₹12999 வரையிலும் பனங்காளி ₹9863 முதல் ₹12002 வரையிலும் விற்பனையானது. 950 மூட்டைகள் ₹70 லட்சத்திற்கு விற்பனையானது.
₹70 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை
previous post