சேலம், ஆக.31: சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் சரவணன் சண்முகசுந்தரம் அறக்கட்டளை சார்பில், 2024ம் ஆண்டிற்கான விடி 55 வழங்கும் விழா நடந்தது. கல்லூரியின் முதல்வர் மற்றும் விடி 55 நிதிநல்கை குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அன்பழகன் வரவேற்று பேசினார். பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் சரவணன் சண்முகசுந்தரம், ஆதரவற்ற இல்லம் மற்றும் மலைவாழ் குழந்தைகள் பயிலும் பள்ளிகளுக்கு கணினி மற்றும் அடிப்படை வசதிகளை செய்ய ₹60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட நிதியுதவிகளை வழங்கினார். இதில் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் ஸ்ரீகாமாட்சி சரவணன், வி.எம்.கே.வி. மருத்துவக் கல்லூரி நிர்வாக இயக்குனர் கோகுல் கிருஷ்ணன் சரவணன், வி.எம்.கே.வி பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் வசுந்தரா சரவணன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தரண் மருத்துவமனை சேர்மன் டாக்டர் செல்வராஜ் பேசினார். இதில் துணை வேந்தர் சுதிர், இணை துணை வேந்தர் சபரிநாதன், பதிவாளர் நாகப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடராஜன் நன்றி கூறினார்.
₹60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
previous post