நாகர்கோவில்,ஆக 2: நாகர்கோவில் மாநகராட்சியில் ₹50 லட்சத்தில் நம்ம நாகர்கோவில் செயலி பெடரல் வங்கி நிதியுதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்கட்டமாக தூய்மை பணிகள் கண்காணிக்கப்பட உள்ளது. அரசின் அனைத்து துறைகளும் ஆன்லைன் மயமாகி வருகிறது. மின்கட்டணம் செலுத்துதல், வருவாய்துறை சான்றுகள் பெறுதல் என அனைத்தும் ஆன்லைன் மயமாக்கப்பட்ட நிலையில், நாகர்கோவில் மாநகராட்சியில், சுகாதார பணிகளை கண்காணித்தல், வரி செலுத்துதல், குடிநீர் கட்டணம் செலுத்துதல், புகார்களை தெரிவித்தல் உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் மயமாக்கும் வகையில் மேயர் மேகஷ் உத்தரவின் பேரில் ‘நம்ம நாகர்கோவில்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இந்த செயலியில் தூய நாகர்கோவில் என்ற பிரிவு ஆகஸ்ட் முதல் வாரத்தில் ெசயல்பாட்டிற்கு வர உள்ளது. இதன்படி, தூய்ைம பணியாளர்கள் வருகை பதிவை சுகாதார ேமற்பார்வையாளர்கள் தங்கள் கேமராவில் புகைப்படம் எடுத்ததும், அவர்களின் வருகை பதிவு செய்யப்படும். ஒரே நேரத்தில் அந்த வார்டுக்குரிய அனைத்து பணியாளர்களின் வருகையும் பதிவாகும். அதன் பின்னர், அவர்களுக்கு வழங்கப்படும் டேக் மூலம் அவர்கள் எங்கெங்கு செல்கின்றனர் என்பது கண்காணிக்கப்படும். இவர்கள் வராவிட்டாலோ அல்லது வேறு எங்காவது சென்றாலோ அவர்களுக்கு ெசயலியே அபராதம் விதித்துவிடும். இதுபோல், மாநகராட்சியில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள 123 வாகனங்களும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு அவை இந்த செயலியில் இணைக்கப்பட்டு அதுவும் கண்காணிக்கப்படும். தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளின் எடையும் வாகன வாரியாக தானாகவே பதிவாகிவிடும்.
இவற்றை அடிப்படையாக கொண்டு, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல், குப்பைகள் சேகரிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகை, அபராதம் விதித்தல் என அனைத்தையும் இந்த செயலியே தானாக செயல்படுத்தி விடும். முதலில் தூய்மை பணியை கவனிக்கும் இந்த செயலி மூலம் இன்னும் இரு மாதத்தில் வருவாய் பிரிவு உள்பட பொதுமக்கள் கட்டணம் செலுத்துதல், புகார்கள் தெரிவித்தல் என அனைத்து செயல்பாடுகளும் நடைமுறைக்கு வர உள்ளது.
செயலி உருவாக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதற்காக ₹50 லட்சம் நிதி வழங்கிய பெடரல் வங்கிக்கு பணி நிறைவு சான்றினை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர ஆணையர் ஆனந்த் மோகன், மாநகர் நல அலுவலர் ராம்குமார், பெடரல் வங்கி மேலாளர்கள் நிரஞ்சன், பிரசன்னா ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து ேமயர் மகேஷ் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சி தமிழ்நாட்டில் முன்மாதிரி மாநகராட்சியாக உள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு முக்கிய காரணமாகும். நம்ம நாகர்கோவில் ெசயலி பொதுமக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றார்.
பொதுமக்கள் கவனிக்கலாம்
பொதுமக்களும், குப்பை சேகரிக்க வரும் பணியாளர்கள் தற்போது எங்கு வருகின்றனர். தூய்மை பணி வாகனம் எங்கு வருகிறது என்பதனை தங்களது மொபைல் போன் மூலம் கண்காணிக்கலாம். தூய்மை பணி குறித்த புகார்களையும் தெரிவிக்கலாம். அந்த புகார்களின் பேரில் அந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதற்கான பதிலையும் அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்காக பொதுமக்கள் கூகுள் பிளே ஸ்டோரில் நம்ம நாகர்கோவில் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் தூய நாகர்கோவில் என்ற தலைப்பில் உள்ள உட்பிரிவிற்கு சென்று அவர்களது வார்டு எண்ணை பதிவு செய்தால், அவர்கள் வார்டுகளின் உள்ள பணிகளை பொதுமக்களும் கண்காணிக்கலாம். புகார்களை தெரிவிக்கலாம்.