மல்லசமுத்திரம், அக்.19: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 300 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், சுரபி ரகம் குவிண்டால் ₹6370 முதல் ₹7250 வரையிலும், பி.டி ரகம் ₹6081 முதல் ₹7269 வரையிலும், கொட்டு ரகம் ₹3619 முதல் ₹4930 வரையும் என மொத்தம் ₹5 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. இதேபோல், நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்தில் 20 மூட்டைகளை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், பட்டாணி (ஈரப்பதம்) கடலை 60 கிலோ கொண்ட மூட்டை ₹2410 முதல் ₹2520 வரை ஏலம் போனது. மொத்தமாக ₹55 ஆயிரத்திற்கு ஏலம் நடந்தது.
₹5 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
previous post