மல்லசமுத்திரம், ஆக.29: மல்லசமுத்திரம் கூட்டுறவு சங்க கிளையில் நேற்று 1,360 மூட்டை பருத்தி ₹35 லட்சத்துக்கு விற்பனையானது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,360 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் பி.டி. ரகம் பருத்தி குவிண்டால் ₹6,990 முதல் ₹8,001 வரையிலும், சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ₹8,510 முதல் ₹9,159 வரையிலும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ₹3,810 முதல் ₹5,220 வரையிலும் விற்பனயைானது. ஒட்டு மொத்தமாக 1,360 மூட்டை பருத்தி ₹35 லட்சத்திற்கு விற்பனையானது.
₹35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
previous post