அயோத்தியாப்பட்டணம், பிப்.21: அயோத்தியாப்பட்டணம் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு சேலம், வெள்ளிமலை, கருமந்துறை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். நேற்று, அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய வார சந்தைக்கு, பல்வேறு பகுதியிலிருந்து 600 ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று நடந்த சந்தையில் ஒரு கிடா ₹4,500 முதல் ₹6,200 வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட நடப்பு வாரம் விலை அதிகரித்தது. இதில் மொத்தம் ₹35லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
₹35 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
0