நெய்வேலி, ஆக. 12: என்எல்சி இந்தியா நிறுவன குழுமத்தின் நடப்பு நிதியாண்டின் (2024-25), காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை வெளியிடுவதற்காக, நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம், கடந்த 7ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் நடப்பு நிதியாண்டின்(2024-25) முக்கிய சிறப்பம்சங்கள், உற்பத்தி மற்றும் நிதிநிலை செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.
என்எல்சி இந்தியா நிறுவனம் 2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 61.67 லட்சம் டன்(LT) பழுப்பு நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. இது 2023-24ம் நிதியாண்டின் முதல் காலாண்டு உற்பத்தியான 50.48 லட்சம் டன்னுடன் ஒப்பிடும்போது, 22.17 சதவிகிதம் அதிகமாகும். இது 2023-24ம் நிதியாண்டின் முதல் காலாண்டு உற்பத்தியான 21.04 லட்சம் டன்னுடன் ஒப்பிடும்போது, 35.27 சதவிகிதம் கூடுதல் வளர்ச்சியாகும். 2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தி 6,133.67 மில்லியன் யூனிட்டாக (MU) உயர்ந்தது. என்எல்சிஐஎல் அதன் துணை நிறுவனங்கள் அடங்கிய குழுமத்தின் மொத்த மின் உற்பத்தி 7,554.08 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது.
2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் அதன் அனைத்து அனல்மின் நிலையங்களின் பிளாண்ட் லோட் ஃபேக்டர் (ஆலை எவ்வளவு திறம்பட பயன்படுத்தப்படுகிறது என்பதை குறிப்பதாகும்), 70.27 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது 2023-24ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 61.20 சதவிகிதமாக இருந்தது. 30.6.24ம் தேதி அன்று முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் (2024-25) முதல் காலாண்டில் வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனடைப்புக்கு முந்தைய வருவாய் (EBITDA) என்ற வகையில் ரூ.1,221.86 கோடியை ஈட்டி, 18.80% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் (2023-24) இதே காலாண்டில் 1,028.47 கோடியாக இருந்தது. மேலும் முந்தைய நிதியாண்டின் (2023-24) இதே காலாண்டில் ரூ.2,689.65 கோடியாக இருந்தது.
30.6.2024ல் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் (2024-25) முதல் காலாண்டில், இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.2901.53 கோடி. இதன் மூலம் 7.88 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் (2023-24) இதே காலாண்டில் ரூ.2689.65 கோடியாக இருந்தது. 30.6.2024ல் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் (2024-25) முதல் காலாண்டில், குழுமத்தின் வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனடைப்புக்கு முந்தைய வருவாய் (EBITDA) என்ற வகையில் வருமானம் ரூ.1,444.38 கோடி. இது, முந்தைய நிதியாண்டின் (2023-24) இதே காலாண்டில் ரூ.1,305.80 கோடியாக இருந்தது. இதன் மூலம், 10.61 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 30.6.2024ல் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் (2024-25) முதல் காலாண்டில், குழுமத்தின் மொத்த வருமானம் ரூ.3,640.60 கோடியாகும். இது, முந்தைய நிதியாண்டின்(2023-24) இதே காலாண்டில் ரூ.3,428.48 கோடியாக இருந்தது. இதன்மூலம், 6.19 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.