அரூர், ஆக.24: கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை கூடுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆடுகளை விற்பனைக்காக ஓட்டி வருகின்றனர். சந்தையில் ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் இறைச்சி கடைக்காரர்கள் வந்திருந்தனர். நேற்றைய சந்தையில், 200க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. ஆடுகள் எடைக்கு தகுந்தார்போல ₹5 ஆயிரம் முதல் ₹9,700 வரை விற்பனையானது. ஒட்டு மொத்தமாக நேற்றைய சந்தையில் ₹28 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
₹28 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
previous post