சேந்தமங்கலம், செப்.2: சேந்தமங்கலம் ஒன்றியம் நடுக்கோம்பை, வாழவந்திகோம்பை ஊராட்சிகளில் ₹25.22 லட்சத்தில் புதிதாக 2 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
வட்டார அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயபிரகாஷ், காளியம்மாள் ராஜூ முன்னிலை வகித்தனர்.
இதில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்து கொண்டு, புதிய அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்து, அப்பகுதி மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் மணிமாலா சின்னுசாமி, பேரூர் திமுக செயலாளர் முருகேசன், ஒன்றிய குழு உறுப்பினர் சித்ரா, பிடிஓ.,க்கள் ஜெயக்குமரன், தமிழரசி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.