இடைப்பாடி, ஆக.24: இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில், நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. சேலம் மற்றும் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதியிலிருந்து கொப்பரையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் கிலோ ₹85.35 முதல் ₹100.65 வரையிலும், 2ம் தரம் ₹68.75 முதல் ₹78.75 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ₹2.65 லட்சத்திற்கு கொப்பரை விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.