கே.வி.குப்பம், ஆக.27: கே.வி.குப்பம் அருகே கூலி வேலை செய்யும் தந்தையிடம் ₹2 லட்சம் மதிப்புள்ள ைபக் கேட்டு மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேனாதிபதி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் சிவசங்கர்(25), டிராக்டர் டிரைவர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோரிடம் ₹2 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிக்கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் சிவசங்கருக்கும் அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். இதனால் மனவேதனையில் இருந்த சிவசங்கர் கடந்த 20ம் தேதி அதே பகுதியில் உள்ள வனப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டதும் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சிவசங்கர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் சிவசங்கரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பரத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.