பாப்பாரப்பட்டி, ஜூலை 16: பென்னாகரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடப்பாண்டிற்கான பருத்தி ஏலம் துவங்கியள்ளது. வெள்ளிக்கிழமையான நேற்று, மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 16 விவசாயிகள் 86 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் வீரன் முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் பாப்பாரப்பட்டி மற்றும் பென்னாகரம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் பருத்தி குவிண்டால் ₹6,009 முதல் ₹6,109வரையும், சராசரி விலையாக குவிண்டால் ₹6,019க்கு ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 3,238 கிலோ பருத்தி, மறைமுக ஏலத்தில் ₹1 லட்சத்து 96,638க்கு ஏலம் போனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.