கடத்தூர், ஆக.17: கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2003-2004ம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கடந்த மே மாதம் பள்ளியில் நடைபெற்றது. அப்போது, அனைவரும் சேர்ந்து பள்ளிக்கு விழா மேடை அமைத்து தருவதாக முடிவெடுத்தனர். அதன்படி, ₹1.50 லட்சம் செலவில் பள்ளிக்கு விழா மேடை அமைத்துக் கொடுத்தனர். இதன் திறப்புவிழா நேற்று முன்தினம், சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மணி தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சார்பில் நடராசமூர்த்தி, நாகராஜன், பச்சையப்பன், அர்த்தனாரி, செந்தில்குமார், வினோத்குமார், கிருஷ்ணமூர்த்தி, வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
₹1.50 லட்சம் செலவில் விழா மேடை திறப்பு
previous post