சேந்தமங்கலம், ஜூன் 24: எருமப்பட்டி வட்டாரத்தில், பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து அடையாள வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும். இன்சூரன்ஸ், சாலை வரி உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2 நாட்களாக அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. ஒன்றியம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயக்கப்படாமல், ஆங்காங்கே கூட்டமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் வட்டாரத்தில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது.