நெல்லை, நவ. 19: பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பஸ்கள் இனி பல்நோக்கு மருத்துவமனை பகுதியிலுள்ள புதிய பஸ் ஸ்டாப்பில் இருந்து இயக்கப்படும் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நெல்லை பாளையங்கோட்டை பல்நோக்கு மருத்துவமனை பகுதியில் புதிய பஸ் ஸ்டாப் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நெல்லை மாநகரம் மற்றும் பிற பகுதிகளிலிருந்து ஹைகிரவுண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை இயக்கப்பட்டு வந்த அனைத்து விதமான பஸ்களும் பல்நோக்கு மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் ஸ்டாப்பில் இருந்து இயக்கப்பட உள்ளது. பாளை ஹைகிரவுண்ட் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்நோன்கு மருத்துவமனைகளுக்கு தினமும் வரக்கூடிய ஆயிரக்கணக்கான நோயாளிகள், அவர்களது உறவினர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் என அனைவருக்கும் இந்த பஸ் ஸ்டாப் வசதியாக அமையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆர்டிஓ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஹைகிரவுண்ட் பஸ்கள் அனைத்தும் பாளை. பல்நோக்கு மருத்துவமனையில் இருந்து இயக்கப்படும்
0