ஹீரோ நிறுவனம், ஹீரோ ஜூம் என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் எல்எக்ஸ், விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் என்ற 3 வேரியண்ட்கள் உள்ளன. ஷோரூம் விலையாக எல்எக்ஸ் ரூ.68,599, விஎக்ஸ் ரூ.71,799 மற்றும் இசட் எக்ஸ் ரூ.76,699 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அறிமுகச்சலுகை விலை எனவும், விலை உயர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்றிலும், மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் பிளஷர் பிளஸ்-ல் உள்ள 110.9 சிசி ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 8.1 எச்பி பவரையும், 5,750 ஆர்பிஎம்-ல் 8.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டாப் வேரியண்டான இசட்எக்சில், இந்த பிரிவிலேயே முதலாவதாக கார்னரிங் விளக்குகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, இடது புறம் திரும்பும்போது இடது புற விளக்குகளும், வலதுபுறம் திரும்பும்போது வலது புற விளக்குகளும் இடம் பெற்றுள்ளன. இசட்எக்ஸ் மாடலில் புளூடூத் இணைப்பு வசதி, நீல நிற டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் வசதிகள் உள்ளன. விஎக்ஸ் மாடலில் ஆம்பர் எல்சிடி ஸ்பீடோமீட்டர் இடம்பெற்றிருக்கும். மாடலுக்கு ஏற்ப டயர் அளவுகளும் வேறுபடும்….