நன்றி குங்குமம் தோழி புத்தாண்டு துவங்கியாச்சு. பதினைந்து நாட்களில் பொங்கல் பண்டிகையும் வரப்போகுது. பண்டிகை வரும் போது ஷாப்பிங் இல்லாமலா? ஒவ்வொரு கடையாக ஏறிச்சென்று ஷாப்பிங் செய்யும் காலம் மாறிவிட்டது. இருக்கும் இடத்தில் பட்டனை தட்டி ஷாப்பிங் செய்வது தான் இன்றைய தலைமுறையின் லேட்டஸ்ட் டிரண்ட். இவர்களின் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ஆன்லைன் ஷாப்பிங். இதில் முன்னோடிகள் அமேசான் மற்றும் பிலிப்கார்ட், ரிலையன்ஸ் டிரன்ஸ். இதை தவிர மற்ற ஷாப்பிங் ஆப்(app)களும் உள்ளன. பெண்களின் ஒவ்வொரு தேவைகளுக்கு ஏற்ப உள்ளன. ஒரு விரல் கொண்டு ஷாப்பிங் செய்து இந்த புத்தாண்டினை கொண்டாடி மகிழுங்கள் தோழியர்களே!* வுமன் ஜீன்ஸ் அண்ட் டிரவுசர்ஸ்ஜீன்ஸ் மற்றும் டிரவுசர்கள் அணியாத பெண்களே இல்லை. வசதியான மற்றும் அணிவதற்கு எளிதான உடைகள் இவை. ஜீன்ஸ் மற்றும் டிரவுசர்களுக்கான பிரத்யேக ஆப்(app) தான் வுமன் ஜீன்ஸ் அண்ட் டிரவுசர்ஸ். இந்த ஒரு ஆப்பினை இன்ஸ்டால் செய்தால் போதும், நீங்கள் பலதரப்பட்ட ஜீன்ஸ் மற்றும் டிரவுசர் ஷாப்பிங் ஆப்களை இன்ஸ்டால் செய்ததற்கு சமம். 5000க்கும் மேற்பட்ட ஜீன் மற்றும் டிரவுசர்களின் டிசைன்கள் குவிந்துள்ளன. நினைத்து பார்க்க முடியாத நியாயமான விலையில் பலதரப்பட்ட பிராண்ட்கள் இங்குள்ளன. உங்களின் பட்ஜெட், பிராண்ட் மற்றும் தரத்திற்கு ஏற்ப நீங்கள் விருப்பமான ஜீன் மற்றும் டிரவுசர்களை தேர்வு செய்துகொள்ளலாம். இலவச ஆப்(app) என்பதால் பதிவு செய்ய அவசியமில்லை.* காஸ்மெட்டிங் மற்றும் மேக்கப்மேக்கப் விரும்பாத பெண்கள் இருப்பார்களா ? பேஸ்வாஷ், காம்பேக்ட் பவுடர், காஜல்ன்னு ஒரு மினி மேக்கப் கிட் எல்லா பெண்களின் ஹேண்ட் பேக்கிலும் இருக்கும். பெண்களுக்கு தேவையான அனைத்து மேக்கப் மற்றும் காஸ்மெட்டிக் பொருட்கள் கொண்ட ஷாப்பிங் ஆப்(app) காஸ்மெட்டிக் மற்றும் மேக்கப். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகு சாதன பொருட்கள் நியாயமான விலையில் உள்ளன.பேர்நெஸ் கிரீம், ஆன்டி ஏஜிங் கிரீம், பாடி ஸ்கிரப், டோனர், ஃபேஷியல் கிட், கிளென்சிங் மில்க், ஷாம்பூ, கண்டிஷ்னர் என தலை முதல் கால் வரை தேவையான எல்லா மேக்கப் பொருட்களை இங்கு ஷாப்பிங் செய்யலாம். சர்வதேச பிராண்ட் பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும். மார்க்கெட்டில் புதிதாக அறிமுகமாகும் லேட்டஸ்ட் அழகு சாதன பொருட்களும் இதில் உடனுக்குடன் சேர்க்கப்படுகிறது. கண்கவர் தள்ளுபடியும் வழங்குவதால், அழகுப் பெண்களுக்கான பயனுள்ள ஆப்(app).* வோயலா ஃபேஷன் ஜுவல்லரிஇந்தியாவின் மிகவும் முக்கியமான வோயலா ஆப்(app), மார்க்கெட்டில் உள்ள அனைத்து நகைகளின் குவியல். கம்மல், மோதிரம், நெக்லெஸ், பிரேஸ்லெட், செயின், வளையல்கள் என 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளன. கல்யாணம், தினசரி அணிகலன், பார்ட்டி, பிறந்தநாள், விசேஷ தினங்களுக்கு ஏற்ப அணிகலன்களை பிரித்துள்ளனர். ஆக்சிடைஸ்ட், வெள்ளி, தங்க முலாம் பூசப்பட்டவை, டெரக்கோட்டா, குந்தன், போல்கி, மீனாக்காரி, முத்து…. இதன் வகைகளும் பல உள்ளன. பெண்கள் இந்த ஆப்(app)பினை விரும்ப காரணம் இதன் அட்ராக்டிவ் விலை.ஆண்களுக்கான செயின், பெல்ட், கஃப் பட்டன்கள், பிரேஸ்லெட்சும் இதில் விற்பனைக்கு உள்ளது. விசேஷ நாட்களில் தள்ளுபடி ஆஃப்பர்களும் உண்டு. பொதுவாக நகைகளை கைகளால் தொட்டு பார்த்து வாங்கினால் திருப்தி ஏற்படும். ஆன்லைனில் அந்த வசதி இருக்காது. அந்த கவலையை போக்க ஆன்லைனில் உள்ள அணிகலன்களின் படங்கள் ஒவ்வொன்றும் மிைகப்படுத்தப்பட்டு இருப்பதால், நகையின் டிசைன்களை துல்லியமாக பார்த்து தேர்வு செய்யலாம். ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களுக்கு இது மிகவும் சிறந்த ஆப்(app).* வுமன் ஃபேஷன் ஷாப்ஆள் பாதி ஆடை பாதி. ஃபேஷன் என்பது ஒவ்வொரு நாளும் மாறும். நாம் எவ்வாறு உடை அணிகிறோமோ அது உங்களின் பர்சனாலிட்டியை மேம்படுத்தும். அந்த வகையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து புதிய ஃபேஷன் உடைகள் இந்த ஆப்(app)பில் உள்ளது. ஃபேஷன் ஷோவில் கேட்வாக் செய்யும் உடைகள் முதல் நாம் அன்றாடம் அணியும் உடைகள் வரை சிறந்த தோற்றத்தை கடைபிடிக்கவும்,வசதியான, உயர் தரமான, நாகரீக ஆடைகள் அனைத்தும் வுமன் ஃபேஷன் ஷாப் மூலம் கிடைக்கும். இந்த ஆப்(app) மூலம் ஆன்லைனில் வாங்கும் உடைகளுக்கு இலவச ஷிப்பிங் மட்டும் இல்லாமல், இலவச கூப்பன்கள், தள்ளுபடிகள் என வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. வுமன் ஃபேஷன் ஷாப் ஆப் மூலம், நீங்கள் 1000த்துக்கும் மேற்பட்ட உடைகளை அனைத்து வலைத்தளங்களிலும் பாதுகாப்பான முறையில் ஷாப்பிங் செய்யலாம்.* விஷாகா ஃபேஷன்குறைந்த விலையில் பட்டாடைகள், டிசைனர் புடவைகள், லெஹங்கா மற்றும் குர்தாக்கள் வாங்கக்கூடிய ஆப்(app). இந்தியாவின் பாரம்பரிய மற்றும் கலாச்சார உடைகளை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது தான் விஷாகா ஃபேஷன். ஒவ்வொரு பெண்ணிற்கும் தான் இப்படி இருக்க வேண்டும் என்ற கனவு இருக்கும்.அந்த கனவை நினைவாக்கும் இந்த ஆப்(app). ஒவ்வொரு உடைகளும் அவரவரின் தேவைகளை அறிந்து மிகவும் நேர்த்தியாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதன் மூலம் மற்றவர்களிடம் இருந்து நீங்கள் தனித்து காணப்படுவீர்கள். உற்பத்தியாளர்களின் நேரடி தொடர்பினால் உங்கள் பணத்திற்கு நீங்கள் வாங்கும் ஒவ்வொரு உடைக்கும் நல்ல மதிப்பு ஏற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுகிறது.* சிப்கர்சிப்கர், உலக பாரம்பரிய ஆன்லைன் ஷாப்பிங் ஆப்(app). பெண்களுக்கான பாரம்பரிய பொருட்களை தேர்வு செய்து வாங்கலாம். பெண்களுக்கு ஏற்ற டிசைனர் புடவைகள், பாலிவுட் புடவைகள், பாவாடை தாவணிகள், பருத்தி புடவைகள், திருமண ஆடைகள், அனார்கலி உடைகள், குந்தன் நகைகள், காக்ரா சோலி, சல்வார் கமீஸ், டிசைனர் ஜாக்கெட்டுகள், நெக்லஸ், பாரம்பரிய ஆடைகள், அணிகலன்கள், பைகள்…. இன்னும் பல இதில் உள்ளன.10,000 க்கும் மேற்பட்ட புதுப்புது டிசைன்கள் மட்டும் இல்லாமல் ஃபேஷனுக்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் புது அம்சங்கள் இதில் தினமும் சேர்க்கப்படுகிறது. இந்தியாவின் மிக நம்பகமான ஷாப்பிங் ஆப்பில் இதுவும் ஒன்று. தரமான பொருட்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கான ஷாப்பிங்கிற்கு 100% உத்தரவாதம் அளிக்கிறது. ஆண்ட்ராய்டு பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட ஆப்(app) என்றாலும், மிக வேகமாக வாடிக்கையாளர்கள் எளிதாக உலவக் கூடிய வகையிலும், நேரடியாக விரும்பியவற்றை ஆர்டர் செய்யும் படி அமைக்கப்பட்டுள்ளது.– கார்த்திக் ஷண்முகம்…
ஹாப்பிங் செய்யலாம் வாங்க
previous post