எப்படிச் செய்வது : ;வெஜிடபிள் ஸ்டாக் செய்ய அனைத்து பொருட்களையும் பாத்திரத்தில் போட்டு 1 மணி நேரம் வேகவைத்து ஸ்டாக்கை வடித்து எடுத்துக் கொள்ளவும்.; இந்த ஸ்டாக்கை ஃப்ரீசரில் ஐஸ் ஊற்றி வைக்கும் ட்ரேயில் ஊற்றி ஐஸ் கட்டிகளாக்கி பாக்ஸிலோ அல்லது சிப்லாக் பேக்கிலோ போட்டு; தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம். சூப் செய்ய காய்கறிகளை ஸ்டாக்கில் வேகவிட்டு உப்பு, மிளகுத்தூள், ஸ்வீட்கார்ன் விழுது சேர்த்து; கொதித்ததும், சூப்பை கெட்டியாக்க கார்ன்ஃப்ளார் கலவையை ஊற்றி திக் ஆனதும் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.