ஸ்ரீவில்லிபுத்தூர், டிச.7: ஸ்ரீவில்லிபுத்தூர் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்(29). இவர் மீது கொலை வழக்கு மற்றும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வழக்கு, பணம் பறித்த வழக்குகள் உள்ளன. இதனை தொடர்ந்து இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில கைது செய்ய வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், டிஎஸ்பி ராஜா, விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
இந்த பரிந்துரையின் அடிப்படையில் விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், ராம்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ராம்குமார் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இவர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.