ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசபெருமாள் கோயிலில் ரூ.2.45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஆன்மீக புத்தக விற்பனை நிலையத்தினை பேரூராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார் திறந்து வைத்தார். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பழமையான ஸ்ரீ ஆதிகேசபெருமாள் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைணவ மகான் ராமானுஜரின் அவதார ஸ்தல மண்டபத்தில் ரூ.2.45 லட்சம் மதிப்பீட்டில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், கோயில் செயல் அலுவலர் பொறுப்பு கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார் கலந்துகொண்டு, ரூ.2.45 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஆன்மீக புத்தக விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி துணை தலைவர் இந்திராணி சுப்பிரமணி, கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.