காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் மத்திய அரசின் தொழில் முனைவோர் திட்டங்கள் குறித்து ஊடகவியலாளகளுக்கான பயிலரங்கம் நடந்தது. சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி இளையோர் மேம்பாட்டு நிறுவனத்தில் ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் பயிலரங்கம் நடந்தது. இதில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் அருண்குமார் வரவேற்று பேசினார்.
சென்னை மத்திய மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் லீலா மீனாட்சி தலைமை தாங்கி, ‘மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு தொழில் முனைவோர் திட்டங்களை, மக்களிடம் நேரடியாகக் கொண்டுசெல்வது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்’’ என்றார். சிறப்பு விருந்தினராக தனியார் (ஸோஹோ) நிறுவனத்தின் மனிதவள தலைமை நிர்வாகி சார்ல்ஸ் காட்வின் பங்கேற்று பேசுகையில்; `தற்போதைய சூழலில் இளைஞர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் உதவியாக இருக்கும்’ என்றார். பின்னர், ராஜீவ்காந்தி தேசிய இளையோர் மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி அலுவலர் டேவிட் பால், மத்திய அரசு செயல்படுத்தி வரும் தேசிய திறன் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திறன் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கி பேசினார். முடிவில், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக துணை இயக்குநர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.