கோவை, மே 20: ஒன்றிய அரசு சார்பில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முக்கிய நகரங்களில் ‘’ஸ்மார்ட்சிட்டி’’ (சீர்மிகு திட்டம்) திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தந்த மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து இந்த புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், சிறப்பாக செயல்படும் நகரங்களில் தமிழ்நாட்டில் கோவை, நாகாலாந்தில் கோகிமா, சூரத், ஆக்ரா, ஸ்ரீநகர், கோவா, இந்தூர் ஆகிய 7 நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. இந்நகரங்களை சேர்ந்த மாநகராட்சி கமிஷனர்கள் கலந்துரையாடல் கூட்டம் வரும் 22ம் தேதி கோவாவில் நடக்கிறது. இந்த 7 நகரங்களை சேர்ந்த மாநகராட்சி கமிஷனர்களுடன், பாராளுமன்ற நிலைக்குழுவினர் கலந்தாய்வு மேற்கொள்கின்றனர். இதில், பங்கேற்க கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் இன்று கோவா புறப்பட்டு செல்கிறார்.