அவிநாசி, ஜூன் 4: மாநில அளவிலான 10-வது ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி கடந்த மே மாதம் 25-ம் நீலகிரி குன்னூரில் உள்ள ப்ரோவிடென்சி கல்லூரியில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இதில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலூகா பெருமாநல்லூரில் உள்ள கே.எம்.சி பொதுப்பள்ளியில் யு.கே.ஜி பயிலும் மாணவன் அகத்தியன் என்பவர் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டு 2 தங்கப்பதக்கங்களையும், பரிசு கோப்பையையும் வென்றார்.
மேலும் அதிகப்படியான வெற்றிப்புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்தார். இந்த போட்டியில் வென்ற மாணவரையும், பயிற்சி அளித்த ஜோதிபாசு மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி தலைவர் கே.சி.சண்முகம், பள்ளி தாளாளர் சி.எஸ். மனோகரன், பள்ளி தலைமைச்செயலர் சுவஸ்திகா மற்றும் பள்ளி முதல்வர் முனைவர் சீனிவாசன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.