திருவிடைமருதூர், ஆக. 10: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தெற்கு மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரஃபிக் (58). இவர், ஸ்கூட்டி பெப் இருசக்கர வாகனத்தில் கும்பகோணத்திலிருந்து திருவிடைமருதூர் நோக்கி நேற்று மதியம் சென்றார். அப்போது, திருபுவனம் மெயின் ரோடு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதியதில் ரஃபிக் தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரை அப்பகுதியினர் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முகமது ரஃபிக்கை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.