வீரவநல்லூர்,மே 15: சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நடந்த, நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான வழிகாட்டி கையேட்டினை கலெக்டர் சுகுமார் வெளியிட்டார். சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘கல்லூரி கனவு’ என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமை வகித்து மேல்நிலை வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர் கல்வி குறித்த வழிகாட்டி கையேட்டை வெளியிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி, முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், அண்ணா பல்கலைக்கழக முதல்வர் செண்பக விநாயக மூர்த்தி, ஸ்காட் பொறியியல் கல்லூரி இயக்குநர் ஜான் கென்னடி, கல்லூரி முதல்வர் ஜஸ்டின் திரவியம், கல்லூரிகள் இணை இயக்குநர் ரவீந்திரன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் பிராங்கிளின், உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு மரிய சகாய அந்தோணி மற்றும் கல்வியாளர்கள், பல்வேறு வழிகாட்டி வல்லுநர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்ட கல்லூரி கனவு வழிகாட்டி கையேடு வெளியீடு கலெக்டர் பங்கேற்பு
0
previous post