ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கில முதுகலை துறை தலைவர் டாக்டர்.வி.சத்தியவதி வழிகாட்டுதலின்படி, வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்தநாளை முன்னிட்டு ஷேக்ஸ்பியர் தின விழாவுக்கு பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவிற்கு செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா மற்றும் சையது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆங்கில உதவிப் பேராசிரியர் ஜெயச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் டாக்டர் பி பாலகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார்.
செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர் ஆலோசகர் டாக்டர் காசிநாத துரை வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் செந்தில் முருகன், உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, பரமக்குடி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் வ.ஸ்டாலின் “பெட் ஷீட்” சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர்களான சா. ஷேக் அயாஸ் அஹமத், மி.ஜெனித்மிஸ்ரியா மற்றும் க.ஸ்ரீவர்ஷா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ரோஸ்லின் ராணி நன்றி கூறினார்.