செய்முறைமுதல் ஒரு பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, பூண்டு, சீரகத்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், உப்பு, பாப்ரிகா சிகப்பு மிளகாய் தூள், பட்டை பொடி சேர்த்து கலந்து பின் அதில் சிக்கனை சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கனை வேக வைத்து எடுத்து துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். கெட்டித் தயிர், எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில், உப்பு, பூண்டு பல் அனைத்தையும் கிளறி தனியாக வைக்கவும். இந்த சாஸை சிக்கனில் சேர்த்து கலந்து மைதா சப்பாத்தியில் வைத்து வெங்காயம், வெள்ளரி, ெலட்யூஸ், செர்ரி தக்காளி ஆகியவற்றை வைத்து ேரால் செய்து கொடுக்கவும். சிக்கன் ஷவர்மா ரெடி. அதேபோல் ஆட்டுக்கறியிலும் இதை செய்யலாம்.