மணப்பாறை, மே19: மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த ஏப்.6ம் தேதி தலைமையாசிரியர் அறை பூட்டுகள் உடைக்கப்பட்டு அலுவலகத்திலிருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கம்யூட்டர் சாதனங்கள் திருடப்பட்டிருந்து. அதேபோல், இளங்காகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மே.12ம் தலைமையாசிரியர் அறை மற்றும் ஹைடெக் வகுப்பறையிலிருந்து லேப்டாப் மற்றும் கம்யூட்டர் மற்றும் பிரிண்டர் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், வடமதுரை, திருப்பூர் பகுதியில் குற்ற வழக்கில் சிக்கியிருந்த திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகேயுள்ள கலர்ப்பட்டியை சேர்ந்த சுப்பையா மகன் செல்வம்(37) கைரேகை தடயங்களில் சிக்கியது. தொடர்ந்து செல்வத்தை நேற்று காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்ததில் அரசு பள்ளிகளில் திருட்டியது உறுதியானது. அதனைத்தொடர்ந்து செல்வம் மீது வழக்கு பதிந்து கைது செய்த வையம்பட்டி போலீஸார், அவரிடமிருந்து 2 கம்யூட்டர், 4 லேப்டாப், ஒரு பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.