துவரங்குறிச்சி, ஆக.24: வையம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் அரிவாளை காட்டி மிரட்டி 3 1/4 பவுன் தாலி செயின் பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம், சேர்வைக்காரன்பட்டி ஊரைச் சேர்ந்த முருகேசன் (45). இவருடைய மனைவி பாக்கியம் (39). இருவரும் நேற்று பிற்பகல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த இளங்காகுறிச்சியில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் சேர்வைக்காரன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கருங்குளம் என்ற இடத்தில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கணவன், மனைவி இருவரையும் வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி பாக்கியம் கழுத்தில் அணிந்திருந்த 3 1/4 பவுன் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி காவல் நிலையத்தில் முருகேசன் அளித்து புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.