ஆண்டிபட்டி, மே 25: ஆண்டிபட்டி அருகே, 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 52.92 அடி. நீர்வரத்து வினாடிக்கு 7 கனஅடியாக உள்ளது. நீர் திறப்பு 72 கனஅடியாகவும், நீர் இருப்பு 2,399 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அதே போல் 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.30 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 15 கனஅடி. நீர் வெளியேற்றம் இல்லை. நீர் இருப்பு 176.53 மில்லியன் கன அடி. 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 95.44 அடி. நீர்வரத்து இல்லை. நீர் திறப்பு 3 கனஅடி. நீர்இருப்பு 55.31 மில்லியன் கன அடி. 52.55 அடி உயரமுள்ள சண்முகநதி அணையின் நீர்மட்டம் 43 அடி. நீர்வரத்து 3 கனஅடி. நீர் வெளியேற்றம் இல்லை. நீர் இருப்பு 51.43 மில்லியன் கனஅடி.