குளித்தலை, ஜூன் 10: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் பகுதியில் பாலமுருகன் கோயில் உள்ளது. இதில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு நேற்று பாலமுருகனுக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பழங்கள் மற்றும் 21 வாசனை திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.