திருத்துறைப்பூண்டி, மே 26: திருத்துறைப்பூண்டியில் இருந்து வேளூர் ஊராட்சிக்கு செல்லும் குடிநீர் பைப் லைன் வேளூர் பாலம் அருகில் உடைந்து குடிநீர் வீணாக ஓடுகிறது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளூர் ஊராட்சி பகுதியில் 1000க்கும் வீடுகளில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வாரத்திற்கு இரண்டு ஒரு நாள் வந்த நிலையில், தற்போது கடந்த ஒரு வாரமாக குடிநீர் வருவது முற்றிலும் வருவது இல்லை.
இந்நிலையில் குடிநீர் வீணாக்காதீர் என்று அரசு விளம்பரம் செய்கிறது. ஆனால் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர் தோக்க தொட்டியில் இருந்து வேளூர் ஊராட்சிக்கு செல்லும் குடிநீர் பைப் வேளூர் பாலம் அருகில் உடைந்து ஒரு மாதமாக பல லட்சம் குடிநீர் வீணாக செல்கிறது. இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.