கோத்தகிரி,பிப்.21: கோத்தகிரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்குகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா திறந்து வைத்தார். கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுஹட்டி ஊராட்சியில் உள்ள அட்டவனை கிராமத்தில் ரூ.8.11 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டிடத்தை நீலகிரி எம்.பி, ஆ.ராசா திறந்து வைத்தார். தொடர்ந்து கொணவக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்கினையும் அவர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு,கூடுதல் ஆட்சியர் கௌசிக், மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,அரசு அதிகாரிகள் மற்றும் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன்,கீழ்கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமன், பொதுக்குழு வீரபத்திரன், மாவட்ட அவைத்தலைவர் போஜன், கோத்தகிரி பேரூர் கழக செயலாளர் காளிதாஸ்,கோத்தகிரி ஒன்றிய துணை செயலாளர் ஸ்டுடியோ செல்வம்,மு.க.கணபதி,சுசில் ஜீவானந்த் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.