கோவை, மே 27: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை்ககழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி வரும் 29,30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இப்பயிற்சி பல்கலையின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில், தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டேக்ளா மிக்ஸ், பிசிபெலாபாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், ஐஸ்கீரிம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், சூப் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ் ஆகியவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் ரூ. 1,770 ஆகும். இதனை பயிற்சி நாளின் போது செலுத்த வேண்டும். கூடுதல் விரவங்களுக்கு 0422-6611268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.