நாகப்பட்டினம், மார்ச் 12: கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு எம்.பிக்களை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் உருவப்படம் எரிப்பு போராட்டம் வேளாங்கண்ணியில் நடந்தது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில், கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை ஒன்றிய அமைச்சர் உருவபடம் எரிப்பு போராட்டத்தில் திமுக ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி பேரூராட்சி திமுக செயலாளர் மரியசார்லஸ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என இழிவுபடுத்திய ஒன்றிய அமைச்சர், ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ படத்தை எரித்து பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினர்.