சிவகங்கை, ஆக.24: சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, படித்து முடித்து வேலை வாய்ப்பில்லாமல் இருப்பவர்களுக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ்2 தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரி, முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.600 மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை புதுப்பித்து வருபவர்கள் குறைந்தபட்சம் 5ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பு அலுவலக உயிர்பதிவேடுகளில் காத்திருப்பவராக இருக்க வேண்டும். படிவத்தை பூர்த்தி செய்து வழங்கி தொடர்ந்து 3ஆண்டுகள் உதவித்தொகை பெறலாம். சுய உறுதிமொழி ஆவணப்படிவம் சமர்ப்பிக்காதவர்களுக்கு உதவித்தெகை நிறுத்தப்படும். தகுதியுடையோர், அனைத்து கல்வி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையுடன் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.