சேலம், மே 17: சேலம் கிச்சிப்பாளையம் பச்சப்பட்டி ஆறுமுகம்நகரை சேர்ந்தவர் சகிலா(42). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஏதாவது வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். நாளை வீட்டிற்கு வா என சகிலா கூறியுள்ளார். இதனை நம்பிய இளம்பெண், அவரது வீட்டிற்கு சென்ற போது, விபசாரத்திற்கு சென்றால் தினமும ₹4 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என கூறி அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தஇளம்பெண் அழுது கொண்டு வீட்டிற்கு சென்று கணவரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த அவரது மற்றும் உறவினர்கள் வந்து நியாயம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார், சகிலாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வேலை கேட்டு சென்ற இளம்பெண்ணை விபசாரத்திற்கு அழைத்த பெண் கைது
0
previous post