Wednesday, February 21, 2024
Home » வேலைக்கு சென்ற இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை ஆரணி அருகே

வேலைக்கு சென்ற இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை ஆரணி அருகே

by Karthik Yash

ஆரணி, டிச.28: ஆரணி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் கடத்தப்பட்டார என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 20 வயது மதிக்க தக்க மகள் பிளஸ் 2 முடித்துவிட்டு, கடந்த 8 மாதங்களுக்கு மேலாக செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு தினமும் வீட்டில் இருந்து வேலை சென்று வந்துள்ளார். அதன்படி கடந்த 24ம் தேதி காலை இளம்பெண் வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் நண்பர்கள், உறவினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, இளம்பெண்ணின் தந்தை ஆரணி தாலுகா போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை மர்ம நபர்கள் யாரேனும் கடத்தி சென்றார்களாக? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

15 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi