Monday, February 26, 2024
Home » வேலைக்குப் போகும் பெண்களே! உடல்நலத்தில் கவனம்!!

வேலைக்குப் போகும் பெண்களே! உடல்நலத்தில் கவனம்!!

by kannappan

எனக்கு நாற்பது வயது ஆகிறது. பதினேழு ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவருக்கு ஐடி துறையில் வேலை. தினமும் காலை ஐந்தரை மணிக்கு எழுகிறேன். சமையல் எல்லாம் முடித்துவிட்டு, குழந்தைகளை பள்ளிக்கு தயாராக்கி, அதன் பிறகு அலுவலகம். இரவு, ஏழு மணிக்குதான் வீட்டுக்கு திரும்புவேன். அதற்குப் பிறகு இரவு உணவுக்கான பணிகள், குழந்தைகளின் வீட்டுப் படிப்பு என்றெல்லாம் முடித்துவிட்டு, படுக்கைக்கு செல்ல இரவு 12 மணி ஆகிவிடுகிறது. மறுநாள் காலை ஐந்தரை மணிக்கு விழிப்பு. இப்படியே செக்குமாடு மாதிரி சுற்றி சுற்றி வரும் வாழ்க்கை. பகல் வேளைகளில் அலுவலகத்தில் மிகவும் சோர்வாக உணர்கிறேன். காலையில் கண் விழிப்பதற்கே கடுமையாக உள்ளது. விடுமுறை நாட்களில் பகலில் தூக்கமும் வருவதில்லை. சமீப ஆண்டுகளாக என் உடல் அதிகம் சதை போடுவதாகவும் தோன்றுகிறது. என் உடல்நலம் குறித்து மிகவும் அஞ்சுகிறேன்.- கவிதா, கோவை.முன்பெல்லாம் பெண்கள் வேலைக்குச் செல்வது அரிது. பெரும்பாலும் வீட்டில் இருந்து குடும்பப் பொறுப்பை மட்டுமேகவனித்துக் கொண்டு இருந்தனர்.ஆனால் -இப்போது அவர்களும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருவர் சம்பாதித்தால்தான் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, அவர்கள் விரும்பியதையெல்லாம் வாங்க முடியும். ஓரளவுக்கு கவுரவமாக குடும்பம் நடத்தமுடியும் என்கிற நிலை. இதற்கு உலகமயமாக்கல் உருவாக்கியிருக்கும் நவீன வாழ்க்கை முறையும் ஒரு காரணம்.லட்சக்கணக்கான பெண்கள் இன்று பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். பெண்கள் என்பதால் நிறுவனங்கள் சிறப்புச் சலுகை எதுவும் கொடுப்பதில்லை. ஆண்கள் சந்திக்கக்கூடிய அதே வேலைப் பளு, மனஉளைச்சல், பிரச்னைகள் அனைத்தும் வேலைப் பார்க்கும் இடத்தில் இவர்களும் சந்தித்து வருகிறார்கள்’’ என்று பேச ஆரம்பித்தார் சஞ்சீவனம் ஆயுர்வேத மருத்துவமனையின் டாக்டர் ராஜீவ்நாயர்.‘‘வீட்டு வேலை மட்டுமே பார்த்து வந்த காலம் போய் பெண்கள் தற்போது வெளியே வேலைக்கு செல்வது மட்டுமில்லாமல், வீட்டு வேலை, குழந்தைகள் என்று அவளுடைய பணிச்சுமை அதிகரித்து விட்டது. இதனால் அவர்களுக்கான ேநரம் கிடைப்பதில்லை. ஒன்று மாற்றி ஒரு வேலை இருந்துக் கொண்டு இருப்பதால், இவர்களும் மனஉளைச்சல் என் நோய்க்கு தள்ளப்படுகிறார்கள்.20 முதல் 30 வயது வரை அவர்கள் என்னதான் ஆடி ஓடி வேலைப் பார்த்துவந்தாலும், அவர்களுக்கு உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுதில்லை. காரணம் அந்த வயதில் கல்யாணம், பிரசவம் குழந்தைகள் என்று அவர்கள் தங்களுக்கான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டு இருக்கும் காலம். மேலும் அந்த சமயத்தில் குழந்தைபேறு இருப்பதால், அவர்கள் தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனை பெற்று இருப்பார்கள். அவர்களின் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனமாக இருப்பார்கள். ஆனால் 35 வயதிற்கு பிறகு அவர்கள் தங்களுக்கான நேரத்தை செலவு செய்ய மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளின் படிப்பு, வேலைச்சுமை, குடும்பம்ன்னு அவர்கள் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழழ ஆரம்பிக்கின்றனர். எல்லா சுமையும் தன் முதுகில் சுமக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். கூட்டு குடும்பம் உடைந்ததும் இவர்களின் மனஉளைச்சலுக்கு முக்கிய காரணம்’’என்றார்.‘‘நம் முன்னோர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர். சித்தி சித்தப்பா, அத்தை, மாமான்னு வீட்டில் எப்போதும் ஆட்கள் நிறைந்திருப்பார்கள். இதில் ஒருவர் வேலைக்கு போனாலும் அவர்களின் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள், என்ன சாப்பிடுவார்கள் என்ற கவலை இருக்காது. வேலைக்கு சென்று வந்தாலும் தங்களுக்கான நேரம் இருக்கும். இப்போது பெரும்பாலானவர்கள் தனிக்குடித்தனம் தான் செய்து வருகிறார்கள். அப்படி இருக்கும் போது தங்களை பார்த்துக் கொள்ள அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.என்னதான் வேலைப்பளு அலுவலகத்தில் இருந்தாலும் ஒருவருக்கு குறைந்த பட்சம் ஆறு மணி நேர தூக்கம் அவசியம். ஆனால் இப்போது உள்ள சூழலில் இவர்களுக்கு அதுவும் கிடைப்பதில்லை. கிடைக்கும் நான்கு மணி நேரத்திலும் இவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்களா என்று பார்த்தால்… இல்லை என்று தான் சொல்லணும். படுத்தவுடன் தூங்கிடுவேன் என்று சொல்வார்கள். ஆனால் அப்படியே படுத்தாலும் அவர்கள் மனதில் பல நூறு சிந்தனைகள் ஓடிக் கொண்டு தான் இருக்கும். படுக்கும் முன்பே காலை ஐந்து மணிக்கு எழுணும்… சமைக்கணும்… அலுவலகத்தின் வேலை… என பல சிந்தனைகளை பட்டியலிட்டப்படி தான் தூங்க செல்கிறார்கள். இந்த சிந்தனைக்கு நடுவே எங்கு ஆழ்ந்ததூக்கம் ஏற்படும்.மனஉளைச்சல் என்ற ஒரு ராட்சனால் பெண்கள் உடல் ரீதியாக பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். சிலருக்கு தூக்கமின்னை நோயான இன்சோமேனியா ஏற்படும். சருமத்தில் சீக்கிரமே சுறுக்கம் ஏற்படும். மாதவிடாய் பிரச்னை, ஹார்மோன் இம்பாலன்ஸ் மற்றும் கருத்தரிப்பதில் சிக்கல் போன்ற பிரச்னைகள் ஒவ்வொன்றாக தோன்ற ஆரம்பிக்கும். பொதுவாகவே பெண்கள் எப்போதும் மனவலிமை கொண்டவர்கள். என்ன தைரியமாக இருந்தாலும், சின்ன விரிசல் தானே பெரிய பள்ளத்தை ஏற்படுத்தும். பெண்கள் கருத்தரிக்கும் போது அவர்கள் மனம் மிகவும் சாந்தமாக இருக்கணும். அப்போது தான் அவளால் கர்ப்பம் தரிக்கவே யோசிக்க முடியும்.35 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு ப்ரீ மென்சுரல் சிண்ட்ேராம் (pre mensural syndrome) பிரச்னைகள் இருக்கும். அதாவது மாதவிடாய் வரும் ஒரு வாரத்திற்கு முன் அவர்களுக்கு அதீத கோபம், எரிச்சலோடு இருப்பார்கள். இதனால் அவர்கள் மனரீதியாக அதிகம் பாதிக்கப்படுவார்கள். வேலையில் முழுகவனம் செலுத்த முடியாது. இந்த பிரச்னைக்கான தீர்வு வேறு ஒன்றும் இல்லை அவர்களின் மனம் மற்றும் உடல் இரண்டையும் ரிலாக்ஸ் செய்யவேண்டும். அதற்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சைகள் உள்ளன.மனஉளைச்சல் காரணமாக நம்முடைய உடலில் free radicles உருவாகும். அதாவது ஆக்ஸிஜன் வளர்சிதை மாற்றத்தினால் நம் உடலில் நச்சுத்தன்மை பொருட்கள் உற்பத்தியாகும். அவை உயிரணுக்கள் மற்றும் திசுக்களுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தும். மசாஜ் கொடுப்பதன் மூலம் இதனை போக்கி ஹாப்பி ஹார்மோன்களை உற்பத்தி செய்யலாம். இதனால் உடல் உற்சாகமடையும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத மட்டும்ில்லாமல் இவர்கள் தொடர்ந்து யோகாசனம், மூச்சுப் பயிற்சி கண்டிப்பாக எடுத்துக் கொள்வது அவசியம் உடல் வலி கழுத்து வலி போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவரின் ஆலேசனைபடி பிசியோதெரபி எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் விட அவர்களின் உணவு பழக்கம் மற்றும் லைப்ஸ்டைல் கண்டிப்பாக மாற்றி அமைக்க வேண்டும். இதற்கான சிறப்பு ஆலோசகர்கள் உள்ளனர். அவர்களை அணுகலாம். சிலருக்கு மனஉளைச்சலால் உடல் எடை அதிகரிக்கும். விளைவு பாலி சிஸ்டிக் ஓவரி மற்றும் பைப்ராய்ட் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்கள் ஒரு ஐந்து கிலோ எடையை குறைத்தாலே இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். நேரம் இல்லை என்று புலம்பாமல், அவர்களுக்கான நேரத்தை அவர்கள் ஒதுக்க கற்றுக் கொண்டாலே பாதி பிரச்னைகளுக்கான தீர்வு காண முடியும்’’ என்றார் டாக்டர் ராஜீவ்நாயர்.தொகுப்பு: ப்ரியா

You may also like

Leave a Comment

eighteen − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi