சென்னை: வேலூர் மாவட்டத்தில் கட்டப்பட உள்ள மினி டைடல் பூங்கா கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் பரப்பளவில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்கா அமைய உள்ளது. தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் புதிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன. …