குடியாத்தம், செப்.2: குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் பயிற்சி நர்சிடம் சில்மிஷம் செய்து தலைமறைவாக உள்ள டாக்டரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காட்பாடி பகுதியை சேர்ந்த தனியார் நர்சிங் கல்லூரி மாணவி பயிற்சி பெற்று வருகிறார். அதன்படி வழக்கம் போல் நேற்று முன்தினம் பயிற்சிக்காக மாணவி மருத்துவமனைக்கு சென்றார். அப்போது பணியில் இருந்த எலும்பு முறிவு பிரிவு அரசு மருத்துவர் பாபு, மாணவியின் கையை பிடித்து இழுத்து, சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி உடனே அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அதனப்படையில், மாணியின் பெற்றோர்கள் குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி 2 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, தலை மறைவாக உள்ள டாக்டர் பாபுவை வலைவீசி தேடி வருகிறார். தலைமறைவாக உள்ள டாக்டர் பாபு குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.