வேலூர், அக்.19: வேலூர் பதிவுத்துறை டிஐஜி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். வேலூர் பதிவு மண்டலத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய பதிவு மாவட்டங்களில் 45 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகி வருகிறது. இந்நிலையில் வேலூர் பதிவு மண்டல டிஐஜியாக பணியாற்றி வந்த சுதாமல்யா, கோவை பதிவு மண்டல டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றிய சுவாமிநாதன், வேலூர் பதிவு மண்டல டிஐஜியாக மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் வேலூர் பதிவு மண்டல டிஐஜியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலர்கள் வாழ்த்து கூறினர்.