வேலூர், மே 25: வேலூர் மத்திய சிறைவாசியின் மகளுக்கு தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. வேலூர் மத்திய சிறையில் கடந்த 24 ஆண்டுகளாக முருகன் என்பவர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். நன்னடத்தை கைதியாக உள்ள இவர் சிறையிலிருந்து விடுதலை பெற கருணை விண்ணப்பமும் கொடுத்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ள தனது மகள் மதுமிதா, உயர்கல்வியில் சேருவதற்காக சிறைத்துறையின் சார்பில் காட்பாடி தனியார் கல்லூரியில் விண்ணப்பித்தனர். அதில் மாணவி பி.காம் பட்டபடிப்பில் பயில்வதற்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்நிலையில் சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் ஆலோசனையின்பேரில், நேற்று மாணவி மதுமிதாவுக்கான கல்விக்கட்டணம் ரூ.11 ஆயிரத்துக்கான காசோலையை முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் சார்பில் சிறை கண்காணிப்பாளர் தர்மராஜ் முன்னிலையில் தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க துணைத்தலைவர் விஜயராகவலு, செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் சீனிவாசன், சிறை நல அலுவலர் மோகன் ஆகியோர் வழங்கினர்.
வேலூர் சிறைவாசி மகளுக்கு கல்வி உதவித்தொகை முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் சார்பில்
0