வேலாயுதம்பாளையம், மே 20: வேலாயுதம்பாளையம் பகுதியில் மது விற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் பெரிய ரெங்கம் பாளையம் பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் பெரிய ரெங்கம் பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அப்பகுதியில் பெண் ஒருவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பெரிய ரெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் மனைவி வளர்மதி (51) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களையும்,அதே பகுதியில் மதுப்பாட்டில்களை விற்பனை செய்த சேர்ந்த நாகராஜன் மனைவி திலகவதி(50) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுபட்டிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.