வேலாயுதம்பாளையம்,செப்.2: கரூர் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே காந்திநகர் பழைய இரும்பு கடை எதிரில் வசித்து வருபவர் சந்திரசேகர் .இவரது மனைவி விஜயா. நேற்றுமுன்தினம் இரவு இவர்கள் வீட்டில் இருந்த போது.திடீரென வீட்டுக்குள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.அதை பார்த்த சந்திரசேகர் மனைவி விஜயா அக்கம் பக்கத்தினரை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் .இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை.
இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வீட்டுக்குள் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்து அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இருப்பினும் வீட்டுக்குள் இருந்த சாமான்கள் எரிந்து கருகி நாசமாயின.