செய்முறை:வேர்க்கடலையை 10 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து எடுக்கவும்.; புட்டு மாவுடன் 2 சிட்டிகை உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறவும். இந்தக் கலவையை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறிய பிறகு உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த வேர்க்கடலை, உதிர்த்த புட்டு, மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்துப் புரட்டவும். மேலே தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.குறிப்பு: வேகவைத்த புட்டு மாவுடன்… வேகவைத்த வேர்க்கடலை, நாட்டுச் சர்க்கரை, சிறிதளவு நெய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்தால்… இனிப்பு புட்டு ரெடி.
வேர்க்கடலை புட்டு
147
previous post