குன்னம், மே 28: பெரம்பலூர் மாவட்டம் வேளாண் இணை இயக்குனர் பாபு, வேளாண் துணை இயக்குனர் பழனிச்சாமி, வேப்பூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராஜலட்சுமி ஆகியோர்களின் ஆலோசனைப்படிவேப்பூர் வட்டாரத்திலிருந்து 40 விவசாயிகளுக்கு உள் மாவட்ட அளவிலான பயிற்சி கரூர் மாவட்டம் வானகம் நம்மாழ்வார் சுற்றுச்சூழல் நடுவத்தில் 3 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. விவசாயிகள் பண்ணை கழிவு மேலாண்மை பற்றியும், இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பது எப்படி என்பது பற்றியும் விளக்கமாக அறிந்து கொண்டனர். பயிற்றுனர் மாரியாயி அங்கங்க இடுபொருட்கள் பண்ணையிலேயே தயாரித்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார். பண்ணை மேலாளர் சுரேஷ் பண்ணை கழிவு மேலாண்மை பற்றி விளக்கமாக பயிற்சி அளித்தார். பயிற்சி ஏற்பாடுகளை கல்யாண சுந்தரம், கண்ணன், கௌசல்யா ஆகியோர் செய்து இருந்தனர்.