விருத்தாசலம்: கடைகளில் 23 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் வேப்பூர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேப்பூர் அருகே உள்ள வண்ணாத்தூரை சேர்ந்த அண்ணாதுரை (62) என்பவர், தான் நடத்தி வந்த பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்குகள் விற்பனை செய்து வந்ததை கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.
இதேபோல ஐவதுகுடியை சேர்ந்த வெங்கடேசன் மகன் பூபதி (38) என்பவர், அதே பகுதியில் நடத்தி வந்த பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்குகள் விற்பனை செய்து வந்ததை பிடித்து அவரை கைது செய்ததுடன், 2 கடைகளிலும் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 23 கிலோ புகையிலை பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.