பெரம்பலூர், ஜூன் 11: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 208 ஆசிரியர்களுக்கு, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ்ரோவர் மேல்நிலைப்பள்ளியில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியை பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராமராஜ் துவக்கி வைத்து பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களிடம், மாநில அடைவு ஆய்வு (SLAS 2025) முடிவுகளை பற்றியும், எண்ணும் எழுத்தும் செயல்பாடுகள், கற்றல் விளைவுகள் குறித்தும் விளக்கினார்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மரகதவல்லி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் கருத்தாளர்களாக முதுநிலை விரிவுரையாளர் உமா மகேஸ்வரி, விரிவுரையாளர்கள் திலகம், உமாதேவி, ஆசிரிய பயிற்றுநர்கள் சுதா, சாந்தா, கீர்த்தனா, கஸ்தூரி, அசுமாபி, பொன்மலர், நவநீத சோழன், முத்தமிழ்செல்வன், ராஜ்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் சீரங்கன் பயிற்சி ஒருங்கி ணைப்பாளராக செயல்பட்டார். வேப்பந்தட்டை ஒன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா நன்றி கூறினார்.